| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a மாணிக்க வாசகரும், அரிமர்த்தன பாண்டிய மன்னனும் |
| 300 | : | _ _ |a சைவம் |
| 340 | : | _ _ |a தந்தம் |
| 500 | : | _ _ |a அரிமர்த்தன பாண்டியன் தன் அமைச்சரான மாணிக்க வாசகரை குதிரை வாங்க அனுப்பிய காட்சி |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் ஆமாத்திய பிராமண குலத்தில் சம்புபாதாசிரியர் - சிவஞானவதி என்னும் பெற்றோர்களுக்கு அருமகவாக அவதரித்தார். இயற்பெயர் திருவாதவூரர். இவர் அரிமர்த்தன பாண்டியன் அவையில் ‘தென்னவன் பிரமராயன்’ என்ற பட்டம் வழங்கப் பெற்று முதல் அமைச்சராக விளங்கினார். அரிமர்த்தன பாண்டியன் அரசின் குதிரைப்படைக்காக குதிரைகள் வாங்கக் கருதி, அதற்கு தன் முதல் அமைச்சரை பணித்தான். மன்னன் அளித்த பொருளை மாணிக்கவாசகர் குதிரை வாங்கப் பயன்கொள்ளாது திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்) திருக்கோயில் திருப்பணிக்குச் செலவிட்டார். சிவபெருமான் குருவடிவம் காட்டி இவரைக் குருந்த மர நிழலில் ஆட்கொண்டான். அக்காலை இவர் பாடிய பனுவல்களே திருவாசகம். இறைவன் இவருக்கு மாணிக்கவாசகர் என்னும் திருநாமம் சூட்டினார். அரிமர்த்தன பாண்டியனும், மாணிக்க வாசகரும் இச்சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளனர். குதிரை ஒன்று உருவகமாகக் காட்டப்பட்டு திருவாதவூரார் மாணிக்கவாசகர் ஆன கதையை நமக்கு விளக்குகிறது. மாணிக்கவாசகர் சிவனடியாராக உருத்திராக்க மாலைகளுடன் விளங்குகிறார். பாண்டிய மன்னன் மகுடம், பட்டாடை, ஆபரணங்களுடன் விளங்குகிறான். மன்னர் மீசையுடன் உள்ளார். இச்சிற்பத் தொகுதி அலங்கார கட்டமைப்பில் காட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a யானைத் தந்த சிற்பங்கள், மாணிக்கவாசகர்-அரிமர்த்தன பாண்டியன்-தந்த சிற்பம், திருவரங்கம் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கம் தந்த சிற்பங்கள், திருச்சி, வாழ்வியல் தந்த சிற்பங்கள், ஸ்ரீரங்கநாதசுவாமி தேவஸ்தான அருங்காட்சிய தந்த சிற்பங்கள் |
| 710 | : | _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| 752 | : | _ _ |a திருவரங்கம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c திருவரங்கம் |d திருச்சி |f திருவரங்கம் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 12.00275101 |
| 915 | : | _ _ |a 79.06188179 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000509 |
| barcode | : | TVA_SCL_000509 |
| book category | : | தந்தச் சிற்பங்கள் |
| cover | : |
|
| Primary File | : |